பாடலில் காதலியின் நினைவு வந்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்!
டெல்லியில் நடந்த ஒரு திருமண கொண்டாட்டத்தில் எதிர்பாராத திருப்பமாக, திருமண விழாவின் போது மணமகன் தனது திருமணத்தை ரத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் நினைவுகளைத் தூண்டும் வகையில், DJ 'சன்னா மெரேயா' என்ற உணர்ச்சிகரமான பொலிவுட் பாடலைப் இசைத்த பிறகு, மணமகன் மண்டபத்தில் இருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
சன்னா மெரேயா பாடல்
ரசிகர்கள் மத்தியில் காதல் முறிவு' பாடலாகப் பிரபலமாக அறியப்படும் 'ஏ தில் ஹை முஷ்கில்' படத்தின் பாடலை DJ இசைத்தபோது, மணமகனுக்கு தனது கடந்த கால காதலியின் நினைவுகள் வந்ததால், அவர் தனது திருமணத்தை விட்டு வெளியேறினார்.
இதனையடுத்து மணமகன் பக்கத்திலிருந்து வந்த விருந்தினர்களும் அப்போது அங்கிருந்து வெளியேறினர்.
இந்த நிலையில் காதலியின் நினைவு வந்ததால் மணமகன் திருமணத்தை நிறுத்திய வினோத சம்பவம் பற்றிய தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.