க்ரீன் டீ நல்லதா! பால் நல்லதா! வெளியான நன்மை தகவல்!
உடற்பயிற்சி செய்பவர்களிடமும் க்ரீன் டீ பிரபலமாக இருந்து வருகிறது.
க்ரீன் டீயில் அதிக ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளது இதிலுள்ள மூல பொருட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக இருந்து நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
அத்தோடு உடலிலுள்ள செல்கள் ஆக்ஸிஜனேற்றத்தை உறிஞ்சுவதை பால் தடுக்கிறது காலையில் பால் கலந்த தேநீரை குடிப்பதை விட க்ரீன் டீ குடிப்பது நல்லது என்று கூறப்படுகிறது.
பால் கலந்து தயாரிக்கப்படும் ஒரு கப் தேநீரில் 30mg-60mg அளவு காஃபின் உள்ளது என்று கூறப்படுகிறது.
அதிகளவு பால் கலந்த டீ குடிப்பதால் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய துடிப்பின் வேகம் அதிகரிக்கலாம். அதனால் ஒரு நாளைக்கு 1-2 கப் தேநீர் மட்டும் அருந்த வேண்டும்.
நன்மைகள்
அதேசமயம் பால் சேர்க்காமல் பிளாக் டீயாக குடிப்பது நல்லது அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம்.
கிரீன் டீயில் நல்ல அளவு ஃவுளூரைடுகள் உள்ளது, இது உங்களது எலும்புகள் மற்றும் பற்களுக்கு பலம் சேர்க்கிறது. அதுவே தேநீரில் பாலை சேர்த்தால் ஃவுளூரைடுகளின் எண்ணிக்கை குறைந்துவிடும்.
கிரீன் டீ குடிப்பதன் மூலம் இதய ஆரோக்கியம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் இரண்டும் மேம்படுகிறது.
தினமும் க்ரீன் டீ குடிப்பதன் மூலம் உடலில் தங்கியுள்ள தேவையற்ற நச்சுக்கள் வெளியேற்றப்படுகிறது மற்றும் இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.
கிரீன் டீ குடிப்பதால் வளர்சிதை மாற்றம் மேம்பட்டு உடல் எடை குறைகிறது.வெறும் தண்ணீரில் தேயிலை கலந்து குடிப்பது நல்லது, அதில் கலோரி குறைவாக இருக்கும். ஆனால் அதில் பால் சேர்க்கும்போது தேநீரின் முழுமையான பலனை நம்மால் பெற முடியாமல் போய்விடுகிறது, அதனால் பால் கலந்து தயாரிக்கப்படும் தேநீரை விடவும் க்ரீன் டீ அதிக நன்மைகளை தருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.