அம்பலாங்கொடையை உலுக்கிய பெரும் சோகம்
அம்பலாங்கொடை, மாதம்பா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று மாணவர்களில் காணாமல் போன மாணவனின் சடலத்தை கடற்படை சுழியோடிகள் இன்று கண்டுபிடித்தனர்.
குறித்த இடத்தில் நேற்று நீராட சென்ற மூன்று மாணவர்களும் அலையினால் அடித்துச் செல்லப்பட்டிருந்தனர்.
மாயமான மாணவர்கள்
இதன்போது அருகில் இருந்த நபர் ஒருவர் மாணவர் ஒருவரை காப்பாற்றியதாகவும், மற்ற இரு மாணவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
அதன்பின்னர் நேற்று (19) மாலை மாணவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மற்றைய மாணவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த இரு மாணவர்களின் சடலங்களும் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நீராடச்சென்ற மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.