வெளிநாடென்றில் யாழ்ப்பாண தமிழருக்கு நேர்ந்த பெரும் துயரம் ; சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரிச்மண்ட் ஹில் பகுதியில் மாலை வேளையில் இரண்டு வாகனங்கள் மோதுண்டமையினால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவர் காயம்
சம்பவத்தில் யாழ்பாணத்தை பிறப்பிடமாகவும் ரொரன்ரோவை வாழ்விடமாகவும் கொண்ட 65 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.
இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய நிலையில், வீதியில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளனான இரு வாகனங்களின் சாரதிகளும் காயமின்றி தப்பியதுடன், அவர்கள் விசாரணைகளுக்காக பொலிஸாருடன் ஒத்துழைப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.