மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கிய வர்த்தகர்களுக்கு கிடைத்த பெரும் அதிர்ச்சி! அம்பலமான ஆதாரங்கள்
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சடுதியாக பொருகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்ததனால் மக்கள் பெரும் சிக்கலுக்கு முககொடுத்துள்ள அதேவேளை , சில வியாபாரிகள் பதுக்கல்களிலும் ஈடுபட்டனர். அந்தவகையில் யாரும் வாங்காததால் பழுந்தடைந்த நிலையில் வீசப்பட்ட சீமெந்துக்கள் பக்கற்றுக்கள் குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
மக்களுக்கு வழங்காமல் அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கப்பட்ட சீமெந்துகளே இவ்வாறு வீசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. பலரின் கட்டிட வேலைகள் சீமெந்து தட்டுப்பாட்டினால் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பதுக்கல் வியாபாரிகள் குறித்து பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை அதிக விலைக்கு விற்க ஆசைப்பட்டு பதுக்கப்பட்ட சீமெந்துகள் இவ்வாறு ஒன்றுக்கும் உதவாமல் போனமை பதுக்கல் வர்த்தகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




