இல்லதரசிகளுக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தி; குறைந்தது தங்கம் விலை!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கிய நாள் முதல் கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை, எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் தங்கத்தின் விலை தொடர் உயர்வில் இருந்து வந்த நிலையில் இன்று சவரனுக்கு 880 ரூபாய் குறைந்தது மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.39,280-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து, ரூ.4,910-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம் ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 76,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 2,600 ரூபாய் குறைந்து ரூ.74,100-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.74.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.