9வது வகுப்பு மாணவி கர்ப்பம் ; பாடசாலைக்குள் அரங்கேறிய சம்பவம்; அதிபர் உள்ளிட்டோர் நேர்ந்த கதி
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு கிளாட் பழங்குடியினர் நல பெண்கள் ஆதிவாசி விடுதியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்த 15 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடல்நலக் றைவு காரணமாக காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு பரிசோதனை செய்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

விசாரணை
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், பாடசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சமையற்காரராக பணிபுரிந்தவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் ஏற்பட்ட தீவிர பற்றாக்குறை மற்றும் நிர்வாகத்தின் அலட்சியத்தைக் கருத்திற்கொண்டு, பள்ளியின் தலைமை ஆசிரியை, விடுதி காப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் உள்ளிட்ட மூன்று பேரை இடைநீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பழங்குடியினர் மாணவிகள் தங்கிப் பயிலும் இதுபோன்ற விடுதிகளில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தவும், தீவிர கண்காணிப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறுமிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய இடங்களில் இது போன்ற பாலியல் குற்றங்கள் அரங்கேறுவது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசுப் பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.