பிக்பாஸ் வீட்டில் மைனா நந்தினியிடம் காதலைச் சொன்ன முக்கிய போட்டியாளர்!
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 6.
இந்த நிகழ்ச்சி தற்போது 95 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது.
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், இதுவரை 14 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இதனையடுத்து தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிர், அமுதவாணன், ஏடிகே, மைனா என மொத்தம் 7 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.
இவ்வாறான நிலையில் கடந்த வாரம் இடம்பெற்ற Ticket to Finale டாஸ்குகளில் சிறப்பாக விளையாடிய அழுதவாணன் முதல் பைனலிஸ்டாக தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில், இந்த வாரம் முழுவதும் பழைய போட்டியாளர்கள் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளனர். இது பார்வையாளர்களை குஷியடையச் செய்துள்ளது.
இவர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுடன் ஜாலியாக அரட்டை அடித்தும் விளையாடியும் வருகின்றனர்.
இப்படி ஒரு சூழ்நிலையில் மைனா நந்தினியிடம் தனது காதலை வெளிப்படுத்துவது போல ஜி பி முத்து நடிக்கிறார். அப்போது கூடவே இருந்த விக்ரமன் கலாய்த்துள்ளார்.