தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததாக தகவல்! கேள்விகளால் துளைப்பு
இரண்டாம் இணைப்பு
கேள்விகளால் விஜயை துளைத்த ஆளுநர்!
சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து பேசினார்.
ஆளுநரின் அழைப்பின் பேரிலேயே விஜய் ஆளுநர் மாளிகை சென்றதாக சொல்லப்படும் நிலையில் பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற சூழலில் ஆளுநர் சில விளக்கங்களை கேட்டதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், விஜய்க்கு இருக்கும் ஆதரவு, பெரும்பான்மையை எப்படி நிரூபிக்க போகிறீர்கள் என பல கேள்விகளை ஆளுநர் கேட்ட நிலையில் அதற்கான பதிலை விஜய் சொன்னதாக சொல்லப்படுகிறது.
முதலாம் இணைப்பு
தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பானையினை பெற்று தவெக தலைவர் விஜய் அமோக வெற்றியை பெற்றிருந்தாலும் கூட்டணி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இரண்டாம் முறை ஆளுநரை சந்தித்த விஜய்
இன்றையதினம் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க இருந்த நிலையில், நேரு விளையாட்டரங்க்கில் பதவி ஏற்புக்காக பிரமாண்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
அதற்காக ஆளுநரை நேற்றியதினம் விஜய் சந்தித்து கடிதம் கையளித்தார். இந்நிலையில் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய தினம் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்க பிரமாண்டமான நிலையில் நேரு விளையாட்டங்கில் பெருமெடுப்பில் ஏற்பட்டுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும் இன்றுகாலை வரை ஆளுநர் அதற்கான அழைப்பை விடுக்காத நிலையில், பலரும் விசனங்களை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை ஆளுநரை விஜய் சந்தித்த நிலையில் தவெக ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.