அரசாங்கத்தின் அதிரடி திட்டம்: அழகிய நகரமாக மாறும் நுவரெலியா!

Nuwara Eliya Ranil Wickremesinghe Sri Lanka Tourism Sri Lanka Tourism
By Shankar Apr 10, 2023 02:56 PM GMT
Report

இலங்கையில் 4 ஆண்டிற்குள் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கான பிரதான சுற்றுலா நகரமாக காணப்படும் நுவரெலியாவின் அதிகபட்ச பங்களிப்பினை பெற்றுக்கொள்ளவதற்கான திட்டமிடலுடன் வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

அரசாங்கத்தின் அதிரடி திட்டம்: அழகிய நகரமாக மாறும் நுவரெலியா! | Government Plan Nuwara Eliya Become Beautiful City

நுவரெலியா மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இன்றைய தினம் (10-04-2023) குறித்த நகர அபிவிருத்தி தொடர்பில்  நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் பங்குபற்றலுடன் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் நுவரெலியா புதிய நகர அபிவிருத்தி திட்டம் மற்றும் நுவரெலியா சுற்றுலா திட்டம் என்பனவும் வெளியிடப்பட்டன.

அரசாங்கத்தின் அதிரடி திட்டம்: அழகிய நகரமாக மாறும் நுவரெலியா! | Government Plan Nuwara Eliya Become Beautiful City

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்று பலர் நினைத்தாலும் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தம் வாயிலாக நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற புதிய எதிர்பார்ப்புக்கள் தோன்றியுள்ளது என ஜனாதிபதி ரணில் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நுவரெலியாவை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் கொள்ளுவதற்கான கண்கவர் நகரமாக அதனை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் நோக்கத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் அதிரடி திட்டம்: அழகிய நகரமாக மாறும் நுவரெலியா! | Government Plan Nuwara Eliya Become Beautiful City

சுற்றுலாத்துறையின் தேவைப்பாடுகளை அறிந்துகொண்டு புதிய திட்டங்களை வகுக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி ரணில், உயர் கட்டிடங்களுக்கு மாறாக ஓய்வெடுக்கக்கூடிய வகையிலான ரம்மியமான சூழலுடல் அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

நுவரெலியா நகரத்திற்குள் மழைநீர் வழிந்தோடுவதற்கு அவசியமான வேலைத்திட்டம் ஒன்று இல்லாமை நீண்டகால பிரச்சினையாக உள்ளதெனவும் அதற்கு தீர்வு காண்பதற்கான வேலைத்திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்திய ஜனாதிபதி, குடிநீர் பிரச்சினைக்கான தீர்வுகளை வழங்குவதற்கான முக்கியமான சில அறிவுரைகளையும் வழங்கினார்.

நுவரெலியா நகரத்திற்கு முறையற்ற விதத்தில் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு மாறாக உரிய திட்டமிடலுக்கமைய நிர்மாணிப் பணிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி ரணில், பாரிய கட்டிடங்களை நிர்மாணிப்பதால் நகரம் சீரழிவுக்கு உள்ளாவதாகவும் நுவரெலியாவாகவே தொடர்ந்தும் தக்கவைப்பதா அல்லது நியுயோர்க் நகரமாக மாற்றியமைப்பதாக என்பதை தீர்மானிக்குமாறும் அறிவுறுத்தினார்.

மத்திய அதிவேக வீதியின் நிர்மாண பணிகள் நிறைவு கண்டவுடன் நுவரெலியாவிற்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவர்களுக்கு அவசியமான வசதிகளை மேம்படுத்துவதற்கான உரிய திட்டங்களை வகுத்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

முதலீட்டாளர்கள் மற்றும் வேறு தரப்பினருக்கு அவசியமான வகையில் நுவரெலியாவை சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாதெனவும், சுற்றுச் சூழலுக்கு உகந்ததாகவும் திட்டமிடப்பட்ட வகையிலுமான அபிவிருத்தியை நகருக்குள் ஏற்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நுவரெலியா நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நகரத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் நானுஓயாவை உப நகரமாக அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

வனப் பாதுகாப்புப் பகுதிகளைப் பாதுகாத்து நுவரெலியாவை பசுமை நகரமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன் நுவரெலியாவை மையமாகக் கொண்டு 05 புறநகர்ப் பகுதிகளை அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பது மற்றும் இராமாயண மையம் ஒன்றை அமைப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

நானுஓயா புகையிரத நிலையத்தை நவீனமயப்படுத்தி அதற்கு அருகில் உயர்தர பொருளாதார நிலையமொன்றை ஸ்தாபிக்குமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, இதன் மூலம் விவசாயிகள் மரக்கறிகளை பொதி செய்து பாதுகாப்பாக கொழும்புக்கு கொண்டு செல்ல முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

குதிரைப் பந்தய மைதானம் மற்றும் குளத்தை அபிவிருத்தி செய்தல், குளத்திற்கு அருகில் வாகன தரிப்பிட வசதிகளை மேம்படுத்துதல், நுவரெலியா நகரில் முறையான நீர் முகாமைத்துவ வேலைத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துதல் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், பிரதேச மக்களின் வருமானத்தை உயர்த்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டம் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US