நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி; ஐந்து பிள்ளைகளை பெற அரசாங்கம் சட்டம் கொண்டுவரவேண்டும்!
இலங்கையில் உள்ள தம்பதிகள் ஐந்து பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும் என்ற சட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் எதிர்நோக்கியுள்ள சிரமங்கள் சம்பந்தமாக கருத்து வெளியிடும் போதே ஹரிசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பதிவாளர் நாயகம் வெளியிடும் திருமணங்களை பதிவு செய்யும் புதிய சுற்றறிக்கையை துரிதமாக மாற்றி, திருமணம் செய்து கொள்வோர் 5 பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டியது கட்டாயம் என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது அனைத்திற்கும் மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 5 பிள்ளைகளை பெற்றெடுத்தால், குறைந்தது இளைய மகனை எண்ணெண்ணை வரிசையில் நிற்க வைக்க முடியும்.
இரண்டாவது பிள்ளையை எரிவாயு வரிசையில் நிற்க வைக்கலாம். எரிவாயுவை கொள்வனவு செய்ய குறைந்தது மூன்று நாட்கள் தேவைப்படுகிறது. எஞ்சியிருக்கும் பிள்ளைகளை சீனி, பால் மா, அரிசி வரிசைகளில் நிற்க வைக்கலாம்.
இதனால், திருமணம் செய்யும் போது 5 பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டியது கட்டாயம் என பீ. ஹெரிசன் குறிப்பிட்டுள்ளார்.