அரசாங்கம் ஊரடங்கை வெள்வால்களுக்கும் - ஆந்தைகளுக்குமே அமுல்படுத்தியுள்ளது! ஆனந்த தேரர்
நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு ஊடரங்கு சட்டத்தை பிறப்பிக்குமாறு வலியுறுத்தினால், அரசாங்கம் வெளவால்களுக்கும், ஆந்தைகளுக்கும் 6 மணித்தியாலங்கள் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளதாக அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்பட்ட அரச தலைவராக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ காணப்படுகிறார். இதுவரையில் எந்த அரச தலைவரையும் மக்கள் இந்தளவிற்கு வெறுக்கவில்லை.
வாழ்வா? சாவா? என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இறப்பவர்கள் மயானத்திற்கு கூட நிம்மதியாக செல்ல முடியாத அவல நிலை இன்று ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்ததையிட்டு பெரும் வேதனையடைகிறேன்.
அரசாங்கம் மக்களை பாதுகாக்கும் என்று நம்ப முடியாது. எனவே மக்கள் இனி சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.