கோட்டாபய நாட்டைவிட்டு வெளியேறியதால் குழப்பத்தில் சபாநாயகர்
புதிய இணைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டில் தான் இருக்கின்றார் என்று சபாநாயகர் மகிந்த யாபா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக பிபிசிக்கு வழங்கிய நேர்காணலி்ல் இதற்கு முன்னர் சபாநாயகர் அறிவித்திருந்த நிலையில் இப்போது மற்றுமொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிபிசியுடனான நேர்காணலில் தான் சிறிய தவறு செய்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை பாதுகாப்பு படைகளின் தலைவர் உட்பட அரச உயர் அதிகாரிகள் குழுவுடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது இலங்கையில் இல்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பிபிசி செய்தி சேவைக்கு பேட்டியளித்த சபாநாயகர், இதனை உறுதி செய்துள்ளார். ஜனாதிபதி தற்போது இலங்கைக்கு அண்மித்த இடத்தில் தங்கியுள்ளதாகவும் அவர் எதிர்வரும் புதன்கிழமைக்குள் அவர் நாடு திரும்புவார் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார் .
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடற்படையின் கப்பலில் இருந்ததை உயர் பாதுகாப்பு அதிகாரி தங்களுக்கு உறுதிப்படுத்தியதாக பிபிசி இணையத்தளம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி இந்தியா சென்றாரா என்று சபாநாயகரிடம் பிபிசி செய்தியாளர் கேட்டதற்குப் பதிலளித்த சபாநாயகர்,
பாதுகாப்புக் காரணங்களுக்காக இது தொடர்பில் மேலும் எதனையும் தெளிவுபடுத்தவும் குறிப்பிடவும் முடியாது என தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.