பிரதமர் பதவி தொடர்பில் முக்கிய கருத்து வெளியிட்ட கோட்டபாய
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ராஜினாமா செய்யவோ அல்லது பதவியில் இருந்து நீக்கவோ தாம் கோரவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் தெரிவித்துள்ளதாக லங்காதீப தெரிவித்துள்ளது.
நேற்றிரவு (28) இடம்பெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தையோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையோ (SLPP) துன்புறுத்துவதற்கு தமக்கு எந்த காரணமும் இல்லை என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடியை ஒத்துழைப்பின் மூலம் தீர்க்க வேண்டும் என்று கூறிய ஜனாதிபதி, அதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவும் தேவை என்று கூறினார்.
கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஆளும் கட்சியின் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக இந்த சந்திப்பின் போது பதற்ற நிலையும் காணப்பட்டது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.