சிங்களம் தெரியாததால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய யாழ்ப்பாண பெண் தக்ஷி
குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
ஏமாற்றப்பட்ட தக்ஷி
இந்நிலையில் இஷாரா செவ்வந்தி பதுங்கியிருந்ததாக கூறப்படும் கிளிநொச்சி பகுதிக்கு நேற்று அவரை அழைத்துச் செல்லப்பட்டார். சஞ்சீவ கொலையின் பின்னர் அவர் பல நாட்கள் மறைந்திருந்ததாகக் கூறப்படும் இடங்களை ஆய்வு செய்ய அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த நிலையில் இஷாராவைப் போன்ற தோற்றமுடைய யுவதியை தேடிய யாழ்ப்பாண சுரேஷ், கெஹல்பத்தர பத்மேவின் அறிவுறுத்தலின் பேரில் தக்சி என்ற பெண்ணைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
தக்சிக்கு சிங்களம் பேசத் தெரியாது என்பதனை சாதகமாக பயன்படுத்தி அவரை இந்த கும்பல் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தக்சியை வெளிநாட்டுக்கு அனுப்புவதாகவும் ஏமாற்றிய சுரேஷ் அவரை நேபாளத்திற்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதற்கமைய, தக்சிக்கு தெரியாமல் நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. நேபாளத்தில் செவ்வந்தி கைது செய்யப்பட்ட போது தக்சி மற்றுமொரு இடத்தில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.