ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நடுவீதியில் நடந்தேறிய அசம்பாவிதம் ; மதுபோதையால் வந்த வினை
சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள தங்கபுரம் பகுதியில் நேற்று (20) இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது அதேபகுதியில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
சந்தேகத்தில் பொலிஸார்
விபத்தில் தங்கநகரைச் சேர்ந்த 38,18,09 வயதுகளைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளதோடு மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த 35,48 வயதுகளைச் சேர்ந்த இருவருமாக ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மூவர் அவசர நோயாளர் காவு வண்டி மூலமும் இருவர் முச்சக்கர வண்டியிலும் மூதூர் தள வைத்தியசைலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து உடைவடைந்த நிலையில் மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.குறித்த நபர்கள் மது அருந்தியிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.