தேர்தலில் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கும் முன்னாள் ஜனாதிபதி!
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிடும் நாமல் ராஜபக்சவிற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இதன்படி, தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் வேட்பு மனுவில் கையொப்பமிடும் நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ இன்று (14-08-2024) காலை கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் வைத்து வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் மஹிந்த ராஜபக்ச,கோட்டபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச குடும்பத்தினர் உள்ளிட்ட அரசியல் தரப்பினரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.