கட்டுநாயக்க விமான நிலையத்தை பரபரப்பாக்கிய சீன பிரஜை
சுமார் 39 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற சீன நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்
மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து இன்று சனிக்கிழமை (11) அதிகாலை 12.50 மணியளவில் வருகை தந்த விமானம் மூலம் குறித்த பயணி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

35 வயதுடைய சீன நாட்டு பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 26,100 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி 39 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சுங்க அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகுதி அரசுடைமையாக்கப்பட்டது.
அத்துடன், குறித்த சந்தேக நபருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.