ஜப்பானின் முன்னாள் பிரதமரின் மறைவுக்கு கோட்டாபய இரங்கல்
ஜப்பான் மிகவும் மரியாதைக்குரிய அரசியல்வாதியை இழந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (Shinzo Abe)சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக ஜப்பானின் தேசிய ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, “ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின்(Shinzo Abe) துயர மரணம் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.
Deeply saddened by the tragic death of former #Japan PM Shinzo Abe. Japan has lost a highly respected politician. I extend my heartfelt condolences to his family, the LDP & to the people of Japan. pic.twitter.com/wbUe5n1RFq
— Gotabaya Rajapaksa (@GotabayaR) July 8, 2022
ஜப்பான் மிகவும் மரியாதைக்குரிய அரசியல்வாதியை இழந்துவிட்டது.
அவரது குடும்பத்தினருக்கும், ஜப்பான் மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.