கோட்டபாய விவகாரம்! சாணக்கியன் கருத்தை நிராகரித்த அலி சப்ரி!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு உத்தியோகபூர்வ இல்லம் ஒன்றை வழங்கியதாக இரா.சாணக்கியன் தெரிவித்த கருத்தை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நிராகரித்துள்ளார்.
இந்த விடயத்தை இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாடாளுமன்றத்தில் ஒரு வெளிநாட்டு பிரிவினைவாத கைக்கூலி இருக்கிறார்.
அதற்கு இராசமாணிக்கம் என்று பெயர். இந்த நாட்டின் தேசியப் பிரச்சினையைத் தீர்க்க அவர் விரும்பவில்லை. எப்பொழுதும் இதை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய விரும்புகிறார்.
இந்தப் பிரச்சனையைத் தீர்க்க யாரேனும் முயன்றால், அது முற்றிலும் எதிரானது. நாம் வேலை செய்யும்போது, அது தடைபடுகிறது. இவர் கூலித்தொழிலாளி. பிரிவினைவாதத்திற்காக பேசுகிறார்.
கோட்டாபயவுக்கு நான் வீடு கொடுத்தேன் என அவர் நேற்று இங்கு கூறியுள்ளார். எனக்கு வீடுகளை கொடுக்க முடியுமா? வீடுகளைக் கொடுக்க நான் யார்? நான் அரசியலைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்தவன் அல்ல. வரி செலுத்தி சம்பாதித்த பணத்தில் கட்டப்பட்ட வீட்டில் வசிக்கிறேன்.
நான் இதுவரை அரசு குடியிருப்பில் வசிக்கவில்லை. வெளிநாட்டில் இருந்து வரும் அதிகாரிகளுக்கு விருந்தோம்பல் செய்வதற்காக மாத்திரம் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இருந்த வீட்டில் தங்கியிருப்பேன்.
நாடாளுமன்ற சிறப்புரிமை என்ற போர்வையில் இப்படி பேசாதீர்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் கண்ணியம் உண்டு. நான் எனது பழைய வீட்டை யாருக்கும் கொடுக்கவில்லை எனவும் அவர் சபையில் தெரிவித்தார்.