நள்ளிரவு தாண்டி தொடரும் ஆர்ப்பாட்டம்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் புகைப்படங்கள்!
இலங்கையில் அண்மைகாலமாக பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
நாட்டு மக்கள் சமீபகாலமாக மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீட்டிற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள், நள்ளிரவு தாண்டி தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பாரிய பதற்ற நிலை நிலவி வருகிறது.
ஆர்ப்பாட்டத்தின் போது மக்களை மோதித்தள்ளிய இராணுவ வாகனம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மேலும் பொலிஸாரால் தண்ணீர் தாரை, தண்ணீர் புகைக்குண்டு தாக்குதலில் மக்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்தவர்களை தூக்கி செல்லும் காட்சிகள் முகநூலில் விஷ்ணுகாந் கனகசபை என்னும் நபரால் பதிவிடப்பட்டுள்ளது.
இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டதில் பொலிஸ் படையினர் பலர் படுகாயமடைந்துள்ளனர், குறித்த புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் விசேட அதிரடிப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின் போதே காயமடைந்துள்ளனர். இதில் 9 பேர் காயமடைந்துள்ளதுடன் 5 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கொழும்பு வடக்கு - தெற்கு கொழும்பு மத்தி நுகேகோட பொலிஸ் பிரிவுகளுக்கு மீள் அறிவித்தல் வரும் வரை ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம் இடம்பெறும் இடத்தில் விசேட அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டு தீவிர நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பான செய்திகளுக்கு...
கோட்டாபய வீட்டிற்குமுன் கைக்குழந்தையுடன் தாய்! நெகிழ்ச்சி பதிவு
உச்சக்கட்ட பதற்றத்தில் இலங்கை: கோட்டாபய வீட்டிற்கு முன் திணறும் பொலிஸார்!
தீவிரமடையும் ஆர்ப்பாட்டம்: தீக்கிரையாக்கப்பட்ட இராணுவ வாகனம்!
போராட்டத்தால் கொழும்பு கண்டி வீதியில் கடும் போக்குவரத்துக்கு பாதிப்பு
கோட்டாபயவின் வீட்டிற்கு செல்லும் வழியை முற்றுகையிட்ட பல்லாயிரம் மக்கள்
கோட்டாபய வீட்டை சுற்றிய பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கம்!





