கோட்டாபய அரசின் இந்த செயலால் இன்று முழு நாடும் அழிவு!
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனேயே 600 மில்லியன் ரூபா வரிச்சலுகையை வழங்கியதன் மூலம் ஒரு சிறு குழுவினர் ஆறுதல் அடைந்தது எனவும், அதன் விளைவாக இன்று முழு நாடும் அழிந்துள்ளது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடல் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இடம்பெற்றது.
இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பாக இரண்டரை வருடங்களாக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரல் எழுப்பியதாக இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
இந்தச் சந்திப்பில் சிறிய மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கவனத்தில்கொள்ளப்பட்டது.