கோட்டாபயவை உடன் கைது செய்ய வேண்டும்! பகிரங்க எச்சரிக்கை
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் குறித்து சம்பிக்க ரணவக்க கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த வரலாற்று நாளில், இலங்கை வரலாற்றில் மிகவும் ஊழல் நிறைந்த, அடக்குமுறை ஆட்சியை முடிவிற்கு கொண்டுவந்த தேசப்பற்றுள்ள தாய்நாட்டின் மகன்கள் மற்றும் மகள்களுக்கு எங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும்,கோட்டாபயவை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை புதிய அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் வரை, இலங்கை மக்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க அனைத்து கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் ஒன்றிணைந்து இடைக்கால அரசை அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனை தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.
Our Salute to the patriotic sons n daughters of the motherland who rose together to oust, on this historic day, the #RajapaksaRogues, the most corrupt, oppressive regime in the known history of #SriLanka! @GotabayaR should immediately resign; and the #IGP should arrest him(1/2)
— Patali Champika Ranawaka (@pcranawaka) July 9, 2022