கோட்டா, ரணில் அரசாங்கம் பதவி விலக வேண்டும்
நாடு இன்று முடங்கியுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படுகின்றதாம். இதனூடாக தம்மால் முடியாது என்பதை ஆட்சியாளர்கள் நிரூபித்துவிட்டனர்.
எனவே, கோட்டா, ரணில் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
தொடர்பில் கருத்து வெளியிட்ட அநுரகுமார திஸாநாயக்க, எரிபொருள் நெருக்கடினால் மாணவர்களுக்கு பாடசாலை செல்ல முடியவில்லை. மக்களுக்கு ஒரு நகரில் இருந்து இன்னுமொரு நகருக்கு செல்ல முடியவில்லை. அத்துடன் மீனவர்களுக்கு கடற்றொழிலுக்கு செல்ல முடியாதுள்ளது. நோயாளிகளை வைத்தியசாலை கொண்டுசெல்ல வாகனம் இல்லை. இதனால் நாடு மேலும் வீழ்ச்சியடையும்.
எனவே, இந்த அரசாங்கம் வீடு செல்ல வேண்டும். என வலியுறுத்தினார் .
அதேசமயம் பிரேமதாசவும் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.