அரசாங்க வேலைக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல் !
இலங்கையில் பொது சேவை நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த முன்மொழிவுக்கே அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
5,882 வெற்றிடங்களுக்கு புதிய ஆட்சேர்ப்பு
அதன்படி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சில் 909, பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சில் 109 வெற்றிடங்களும்,
சுற்றுச்சூழல் அமைச்சில் 144, பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சில் 2,500 வெற்றிடங்களும்,
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் 22, நிதி மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சில் 185, மீன்வளம், நீர்வாழ் மற்றும் கடல்சார் வள அமைச்சில் 20 வெற்றிடங்களும்,
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் 1,615, மத்திய மாகாண சபையில் 72, ஊவா மாகாண சபையில் 303 வெற்றிடங்களும், உள்ளது.
இந்நிலையில் அரசசேவையில் மொத்தம் 5,882 வெற்றிடங்களுக்கு புதிய ஆட்சேர்ப்புகளுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.