IPL ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தகவல் ; எம்.எஸ். தோனி குறித்து CSK நிர்வாகம் முக்கிய தகவல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் எம்.எஸ். தோனி இந்த முறை ஐ.பி.எல் தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என்று சி.எஸ்.கே. அணி தெரிவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் இதனை உறுதிபடுத்தியுள்ளார்.
எனினும், இது குறித்து அவரே முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து அந்த அணியின் நிர்வாகம் அவரிடம் ஆலோசித்து அவரது பங்கு குறித்து இறுதி முடிவை எடுக்கும் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, தோனி துடுப்பாட்ட வீரராக செயற்பாடுவாரா? அல்லது விக்கெட் காப்பாளராக விளையாடுவாரா, அல்லது தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக இருப்பாரா? என்பது குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
10 அணிகள் பங்கேற்கும் 19 ஆவது ஐ.பி.எல். தொடர் 28 ஆம் திகதி முதல் மே 31 ஆம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.