1,500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட உலக பிரசித்தி பெற்ற கோவில்! எங்கு இருக்கு தெரியுமா?
முழுவதும் தங்கத்தால் ஆன “தங்க கோவில்” தான் வேலூர் மாவட்டத்தில் உள்ள “ஸ்ரீபுரம் ஸ்ரீ லட்சுமி நாராயணி கோவில்”. ஸ்ரீ புரம் பொற்கோயில் எனவும் அழைக்கப்படுகின்றது.
இக்கோவில் இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டின் வேலூர் அருகே திருமலைக்கோடி எனப்படும் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயில் ஆகும்.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபுரம் என்ற இந்த பகுதியில் சுயம்புவாக ஸ்ரீ நாராயணி தேவியின் சிலை தோன்றியதாகவும், அப்போது அச்சிலையை சுற்றி ஒரு சிறு கோவில் எழுப்பப்பட்டு வழிபட்டு வந்ததாகவும் இத்தல வரலாறை அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாராயணி உபாசகர் ஒருவர், நாராயணி தேவிக்கு தங்கத்தால் ஆன கோவிலை கட்டும் விருப்பம் மேலிட்டு அவரது முயற்சியால் 1500 கிலோகிராம் சுத்த தங்கத்தை பயன்படுத்தி ரூ.350 கோடி செலவில் கடந்த 2007 ஆம் ஆண்டு இக்கோவில் கட்டி முடிக்கப்பட்டது.
இக்கோவில் தல வரலாறு:
ஸ்ரீலட்சுமி நாராயணிக்கு 55,000 சதுர அடியில் அழகிய திருக்கோயில் அமைக்கப்பட்டு கோயில் முழுவதும் 1,500 கிலோ தங்கத் தகடுகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கோயிலின் மொத்த பரப்பளவு 100 ஏக்கர். ஸ்ரீசக்கர வடிவில் ஆலயத்தை சுற்றி பிரகாரம் அமைந்துள்ளது.
மேலும், 16 கால்களைக் கொண்ட ஸ்ரீசகஸ்ரதீப மண்டபம், 45 அடி உயரம் கொண்ட ஸ்ரீமகள் நீர்வீழ்ச்சி, திறந்தவெளி கலையரங்கம், புல்வெளி, நீரூற்றுகள், பூங்காக்கள் உள்ளன.
ஆலயத்தில் உலகின் மிகப் பெரிய வீணை, 10,008 திருவிளக்கு ஆகியன இடம் பெற்றுள்ளன. ஆசியாவிலேயே மிகப் பெரியளவில் அமைந்துள்ள கோயில் வேலூர் பொற்கோயில்.
மேலும் இக்கோவிலைக் காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர்.
இக்கோவிலுக்கான போக்குவரத்து வசதி: காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து 15 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. ரயில் நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்கும், அங்கிருந்து ஸ்ரீபுரத்துக்கும் பேருந்து, முக்சக்கரவண்டி இயங்குகின்றன. புதிய பஸ் நிலையம் பகுதியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.