கல்யாணி பாலத்தில் 28 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பொருட்கள் மாயம்
ஜப்பானிய அரசின் கடனுதவியுடன் புதிதாக கட்டப்பட்ட கோல்டன் கேட் கல்யாணி (Golden Gate Kalyani) பாலத்தில் சுமார் 28 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான செப்பு கம்பிகள் மற்றும் ஆணிகள் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் போதைக்கு அடிமையானவர்கள் பெறுமதியான செப்பு கம்பிகள் மற்றும் ஆணிகளை எடுத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் மின்சார வயர்களை கூட அறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் ஒளிரச்செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து குறித்த பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயமாக மாற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பரிந்துரைத்துள்ளார்.