குறைந்த வேகத்தில் மீண்டும் எகிறிய தங்கம் விலை!
தொடர்ந்து 5 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று இரு தடவைகள் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் சங்கத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
நண்பகலின் பின் அதிகரிப்பு
இன்று நண்பகலின் பின்னர் தங்கத்தின் விலை 4,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த வகையில் கொழும்பு செட்டியார் தெருவின் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 246,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 226,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 185,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 30,750 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 28,250 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 23,188 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.