புத்தாண்டு காலத்தில் க்ஷாக் கொடுக்கும் தங்க விலை!
ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைக் கண்ட நிலையில் தற்போது ரூ.45 ஆயிரத்தை தாண்டியுள்ளமை சாமானிய மக்கள் மத்தியில் ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எகிறியடிக்கும் தங்கத்தின் விலை
தங்கத்தின் மீதான மக்களின் முதலீடுகள் அதிகரித்துவரும் நிலையில், எகிறியடிக்கும் தங்கத்தின் விலை சாமானிய மக்களுக்கு இனி தங்கத்தை நாம் வாங்கவே வாங்கவே முடியாதா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றின் பின்னர் தங்கவிலையில் ஏற்பட்ட மாற்றம் குறைந்தபாடில்லை. அதோடு தமிழ் புத்தாண்டு, அக்க்ஷய திருதியை என்பன் போன்ற சுபநாட்கள் ஏபரல் மாத்தில் வருவதால் தாங்கம் வாங்க காத்திருப்போருக்கு தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகரிப்பு
இந்நிலையில் சென்னையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக ரூ.320 குறைந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.
அதன்படி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.30 உயர்ந்து 5,630 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,040 ஆகவும் விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 உயர்ந்து 4,612 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.200 வரை உயர்ந்து ரூ.36,896 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் ஒரு கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.80.40 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,400 எனவும் விற்பனையாகிறது.