அதிரடியாக குறைந்த தங்கம் விலை; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி
சென்னையில் இன்று (4) தங்கம் விலையானது அதிரடியாக குறைந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலையானது 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலான நாட்கள் ஏறுமுகத்தில்தான் இருந்து வருகிறது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
சென்னையில் தங்கம் விலையானது நேற்று (3) ஒரு சவரன் ரூ68,480-க்கு விற்பனையாகி உதிய உச்சத்தை தொட்டது.
ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (3) ஒரு கிராம் தங்கம் ரூ.8560-க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.68,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8400-க்கும், சவரனுக்கு ரூ.1280 குறைந்து ஒரு சவரன் 67,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (3) ஒரு கிராம் வெள்ளி ரூ.112-க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.4 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 1,08,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.