அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!
அண்மை காலங்களில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது தங்கம் வாங்க காத்திருந்தோருக்கு ஏக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் சென்னையில் . நேற்று (மார்ச் 20) தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8310-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று (மார்ச் 21) தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.8270-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.66,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.6825-க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.54,600-க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
இலங்கையில் தங்கம் விலை
அதேவேளை இலங்கையில் தங்கம் விலையானது இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி,
24 கரட் தங்கம் 238,000 ரூபாய். 22 கரட் தங்கம் 220,000 ரூபாய். இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 29,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 27,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
அதேவேளை சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.112-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இலங்கையில் வெள்ளி ஒரு கிராமின் விலை 420 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.