இலங்கையில் தங்கம் விலையில் மாற்றம்; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (08) மேலும் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (07) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 379,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.3,000 குறைந்து 376,000 ரூபாயாக பதிவாகியுள்ளது. இன்றைய தங்க விலை நிலவரப்படி,

இன்றைய தங்க விலை
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 346,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்களின் தாக்கத்தால், அண்மைய நாட்களாக உள்நாட்டு தங்கத்தின் விலையும் தொடர்ச்சியாக ஏற்ற, இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.