சர்ப்ரைஸ் கொடுக்கும் தங்கம் விலை ; தொடர் சரிவு...நகைப்பிரியர்கள் பெரும் மகிழ்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து வரும் நிலையில், இன்று (அக்டோபர் 31) ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் ரூ.310 குறைந்துள்ளது.

இதன் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.13,000-க்கும் கீழ் சரிந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,000-ஐக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகை வாங்குவோருக்கு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது.

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
அக்டோபர் 31ஆம் தேதியான இன்று சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.310 குறைந்து ரூ.12,730-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2,480 குறைந்து ரூ.1,01,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.13,887 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,11,096 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.200-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது