கோழிக்கறிக்காக நடந்த கொடூரம்; இருவரின் மரண தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

Anuradhapura Death Penalty Crime High Court of Sri Lanka
By Vironika Oct 31, 2026 01:05 AM GMT
Report

கோழி திருடப்பட்டதாக எழுந்த தகராறைத் தொடர்ந்து ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரின் மேன்முறையீட்டை நிராகரித்த உயர் நீதிமன்றம், அவர்களுக்கான மரண தண்டனையை உறுதிப்படுத்தியுள்ளது.

ராஜபுரகே சுகத் வீரரத்ன மற்றும் ராஜமுனிகே நிஹால் சமிந்த எனப்படும் மகத்தயா ஆகிய இருவருக்குமே இவ்வாறு மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோழிக்கறிக்காக நடந்த கொடூரம்; இருவரின் மரண தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம் | Court Upholds Death Sentences Of Two Men

படுகொலை 

விஜேமுனிகே குணவர்தன என்பவரைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் தங்காலை மேல் நீதிமன்றத்தால் இவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.

வழக்கு விசாரணைகளின்படி, சம்பவத்தன்று உயிரிழந்தவர் மற்றொரு கிராமவாசிக்குச் சொந்தமான கோழியைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அன்றைய தினம் மாலை அவரது வீட்டுக்கு அருகில் அவர் தாக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தை நேரில் கண்ட உயிரிழந்தவரின் தந்தை வழங்கிய சாட்சியத்தின்படி, முதலாவது குற்றவாளி தனது மகனைக் கத்தியால் குத்தியபோது, இரண்டாவது குற்றவாளி அவரைப் பிடித்துக்கொண்டிருந்துள்ளார்.

தமிழர் பகுதியில் 16 வயது சிறுமிக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; 52 வயது நபருக்கு கிடைத்த அதிரடி தண்டனை

தமிழர் பகுதியில் 16 வயது சிறுமிக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; 52 வயது நபருக்கு கிடைத்த அதிரடி தண்டனை

இந்தத் தாக்குதலில் 11 கத்திக்குத்துக் காயங்களுக்கு உள்ளான அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.

எனினும், வழக்கின் முக்கிய நேரடி சாட்சியான தந்தை முரண்பாடான சாட்சியங்களை வழங்கியுள்ளதாகவும், தமது தரப்பு நியாயங்களை விசாரணை நீதிமன்றம் உரிய முறையில் பரிசீலிக்கவில்லை என்றும் தெரிவித்து இரு குற்றவாளிகளும் மேன்முறையீடு செய்திருந்தனர்.

இதனைப் பரிசீலித்த உயர் நீதிமன்றம், உயிரிழந்தவரின் தந்தை வழங்கிய சாட்சியம் நம்பகத்தன்மை வாய்ந்தது எனத் தெரிவித்ததுடன், ஏனைய சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளும் அதனை உறுதிப்படுத்துவதாகக் குறிப்பிட்டது.

வடக்கு ஆளுநர் வேதநாயகன் மீது இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவில் முறைப்பாடு

வடக்கு ஆளுநர் வேதநாயகன் மீது இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவில் முறைப்பாடு

தலைமை நீதியரசர் அல்லாத நீதியரசர் தீர்ப்பை அறிவிக்கையில், குறித்த நேரடி சாட்சி குறுக்கு விசாரணையைத் திருப்திகரமாக எதிர்கொண்டுள்ளதாகவும், மேலும், உயிரிழந்தவரின் உடலில் காணப்பட்ட காயங்கள் தொடர்பான மருத்துவ ஆதாரங்களும் அரச தரப்பு முன்வைத்த சம்பவ விபரங்களுடன் ஒத்துப்போவதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

குற்றவாளிகளின் தரப்பு வாதங்கள், அரச தரப்பு வழக்கில் நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்தத் தவறியுள்ளதாகத் தீர்மானித்த உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டை நிராகரித்ததுடன் தங்காலை மேல் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானங்களையும் உறுதிப்படுத்தியது.

நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US