29 ஆண்டுகளுக்கு பின் மேஷம் செல்லும் சனிபகவான்: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட்
தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த மீன ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். இந்த ராசியில் 2026 ஆம் ஆண்டு முழுவதும் பயணிக்கவுள்ளார். அதோடு 2027 ஆம் ஆண்டின் ஜூன் 03 வரை இருந்து, பின் தனது நீச்ச ராசியான மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார்.
சனி பகவான் இந்த மேஷ ராசிக்கு சுமார் 29 ஆண்டுகளுக்கு பின் நுழையவுள்ளார். இந்த ராசியில் அடுத்த 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். இப்போது 2027 ஆம் ஆண்டில் மேஷ ராசிக்கு செல்லும் சனி பகவானால் எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

நல்ல பலன்கள்
கடகம்: 2027-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. பல நல்ல செய்திகளைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களின் நேர்மையும், ஒழுக்கமும் உயர் அதிகாரிகளை ஈர்க்கும். வியாபாரிகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். முக்கியமாக ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறக்கூடும்.
துலாம்: 2027-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் புதிய முதலீடுகளை செய்தாலும், அதன் மூலம் நல்ல பலன்களைப் பெறக்கூடும். குறிப்பாக முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
மகரம்: 2027-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் கஷ்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வரப்போகிறது. வேலையிலும், தொழிலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வழிகளில் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப பொறுப்புக்களை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். முக்கியமாக இந்த பெயர்ச்சியால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கும்பம்: 2027-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் கும்ப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் கனவுகள் நனவாகலாம். எதிரிகளை வென்று வீழ்த்துவீர்கள். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீண்ட காலமாக சிக்கிய பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும். முக்கியமான முடிவுகளை நன்கு யோசித்து எடுத்து வெற்றி காண்பீர்கள்.