புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; இவ்வளவா... அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாலையில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.89 ஆயிரம் என்று புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறமை நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தங்கத்தில் விலை உயர்வானது பாமர மக்களுக்கு மட்டுமல்லாது மேல்தட்டு மக்களையும் க்ஷாக்கில் தள்ளியுள்ளது.
ஒரே நாளில் இருமுறை தங்கம் விலை உயர்வு
தங்கம் விலை இம்மாத தொடக்கத்தில் இருந்தும் விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருந்து வருகிறது.
அதிலும் கடந்த சில நாட்களாக ஒரே நாளில் இருமுறை தங்கம் விலை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400-ம், கிராமுக்கு ரூ.50-ம் உயர்ந்து, முறையே ரூ.87,600-க்கும், ரூ.10,950-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இன்று காலையில் தங்கம் விலை
இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,480-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.11,060-க்கு விற்பனையானது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாலையில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.89 ஆயிரம் என்று புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை
கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.11,125-க்கு விற்பனையாகி வருகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,400 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலையும் மாலையில் உயர்ந்துள்ளது.
அதன்படி கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.167-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.