வார முதல் நாளில் க்ஷாக் கொடுத்த தங்கம் விலை
செப்டம்பர் மாதம் முதல் நாளே தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் நகை பிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.
அந்தவகையில் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லாத நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
இன்றைய தங்க விலை நிலவரம்
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் 5,560 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,480 ஆகவும் விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் 4,554 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,432 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை மாற்றமில்லை
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.80 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இலங்கையில் தங்கத்தின் விலை
அதேவேளை இலங்கையிலும் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
அதன்படி 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 161,000 ரூபாவகவும், 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 175,600 ரூபாவகவும் பதிவாகியுள்ளது.