வார இறுதியில் க்ஷாக் கொடுத்த தங்கம் விலை
செப்டம்பர் மாதம் முழுவதும் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவதால் நகை வாங்க காத்திருப்போர் கவலையில் உள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ .5,530 ஆகவும், சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,240 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,530 ஆகவும், சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,240 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.20 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.