யாழில் இளைஞனை பலியெடுத்த சொகுசு பேருந்து; ஸ்தலத்தில் பறிபோன உயிர்
யாழ்ப்பாணம் புங்குடுதீவு, வாணர் பாலத்திற்கு அருகே இன்று இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
புங்குடுதீவு வாணர் பாலம் பகுதி, மடத்துவெளி கடற்படை முகாமிற்கு அருகாமையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

புங்குடுதீவில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞர் மீது, எதிர் திசையில் வந்த சொகுசுப் பேருந்து பலமாக மோதியுள்ளது குறித்த பேருந்து மிக அதிவேகமாகப் பயணித்ததே இந்த உயிரிழப்பிற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் துரதிர்ஷ்டவசமாகச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், பேருந்து ஓட்டுநரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.