மாத முதல் நாளே க்ஷாக் கொடுத்த தங்கம் விலை!
இன்று ஏப்ரல் மாதம் முதல் நாளே அதிரடியாக தங்கம் விலை உயர்ந்துள்ளமை நகை வாங்க காத்திருந்தோடுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தில் விலையானது கடந்த சில நட்களால மக்கள் நினைத்துபார்க்க முடியாதளவும் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் தங்க விலை நிலவரம்
அந்தவகையில் சென்னையில் நேற்று முன் தினம் மார்ச் 30ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
அதன்படி இன்று ஏப்ரல் முதலாம் திகதியான இன்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ6,455க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,288க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,304க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.81.60க்கும் , ஒரு கிலோ வெள்ளி ரூ.81,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.