அம்பாறையில் கொள்ளையரிடம் மீட்கப்பட்ட தங்க சங்கிலிகள்!
அம்பாறையில் இடம்பெற்று வரும் தங்கச் சங்கிலி கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் நேற்று முன் தினம் (21) பகல் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் வாவின்ன மற்றும் பரகஹகெலே பகுதிகளைச் சேர்ந்த 27 மற்றும் 31 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கொள்ளை மற்றும் திருட்டுச் செயல்
இகினியாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலிஒலுவ பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணைகளுக்கமைய, அம்பாறை, இகினியாகல மற்றும் சம்மாந்துறை போன்ற பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்ட 4 தங்கச் சங்கிலிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் போதைப்பொருள் பழக்கத்தினால் இத்தகைய கொள்ளை மற்றும் திருட்டுச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், ச சந்தேக நபர்கள் இருவரும் நேற்று புதன்கிழமை (22) அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களை தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.