தமிழர் பகுதியில் மாணவர்களை தவிக்க விட்டு சென்ற பேருந்து; தரமான சம்பவம் செய்த தவிசாளர்!
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இன்று (23) காலை பாடசாலை மாணவர்கள் நீண்ட நேரமாக பாடசாலை செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளனர்.
குறித்த தடவழியால் செல்லும் பேருந்துகள் மாணவர்களை உதாசீனப்படுத்தி அவர்களை ஏற்றாது சென்ற நிலையில் திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் அதிரடி காட்டியுள்ளார்.
மாணவர்கள் அந்தரிப்பு
பாடசாலை மாணவர்களுக்காக களத்தில் இறங்கிய திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் அவ்வீதியால் பயணித்த பேருந்தை நிறுத்தி மாணவர்களை பாடசாலைக்கு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் தவிசாளரின் செயலுக்கு பாராட்டு குவியும் அதேவேளை மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல காத்திருக்கையில் இவ்வாறு அவர்களை பேருந்து ஏற்றாது செல்வது தொடர்வதாக பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்தி மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முறையான அரச பேருந்து வாதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.