மன்னாரில் மீட்கப்பட்டுள்ள தங்கக்கட்டிகள்!
மன்னார் கடல் பகுதியில் இருந்து இராமேஸ்வரம் தீவு பகுதிக்கு தங்க கட்டிகளை கடத்திய நிலையில் மேலும் இந்திய மதிப்பில் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க கட்டிகள் நேற்று (29.11.2023) காலை சுங்க கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
மன்னார் கடல் பகுதியில் இருந்து ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு தங்க கட்டிகளை கடத்தல்காரர்கள் கடத்தி வருவதாக சுங்க கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதை அடுத்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகள் அதி வேகமாக சந்தேகத்துக்கிடமாக வந்த மீன்பிடி படகை மடக்கி விசாரணையில் ஈடுபட்ட முற்பட்ட போது படகில் இருந்தவர்கள் படகை நிறுத்தாமல் அதிவேகமாக சென்ற நிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் நடுக்கடலில் துப்பாக்கியால் கடத்தல்காரர்களை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடத்தல் காரர்கள் பயந்து படகை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று (29.11.2023) காலை கடத்தல் காரர்கள் விட்டு சென்ற படகில் இருந்து 3 கிலோ கடத்தல் தங்க கட்டிகள் பறிமுதல் செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் மேலும் கடத்தல்காரர்கள் விட்டு சென்ற பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு சுங்க கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் மேலும் 5 கிலோ எடை கொண்ட கடத்தல் தங்கக் கட்டிகளை மீட்டுள்ளனர்.
இதையடுத்து ஒரே நாளில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட இந்திய மதிப்பிலான 5 கோடி ரூபாய் பெறுமதியான 8 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.