தங்க - வெள்ளி விலைகள் திடீர் சரிவு ; மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (16) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,012 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 80.01 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று(16) தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, 406,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 408,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 375,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கமைய, 24 கரட் தங்கத்தின் விலை 51,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் விலை 46,913 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.