தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட தீபாவளி ஸ்பெக்ஷல் பலகாரம் ; தலை சுற்றவைக்கும் விலை!
இந்தியாவின் ஜெய்ப்பூரில் உள்ள இனிப்புக் கடை ஒன்றில் தங்கம் மற்றும் வெள்ளி முலாம் பூசப்பட்ட மிட்டாய் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் அதன் விலை பலருக்கும் தலை சுற்ற வைத்துள்ளது.
ஏனெனில் அந்த இனிப்பு ஒரு கிலோவுக்கு வியக்கத்தக்க வகையில் இந்திய ரூ.1 லட்சத்திற்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் உண்ணக்கூடிய தங்கம், குங்குமப்பூ பாதாம்
24 காரட் உண்ணக்கூடிய தங்கம், குங்குமப்பூ, பாதாம் மற்றும் ஆயுர்வேத பொருட்களால் வடிவமைக்கப்பட்ட இது, ஆடம்பரத்தையும் ஆரோக்கியத்தையும் கலக்கிறது.
தியோஹார் என்ற சுவையான இனிப்பு பிராண்டின் நிறுவனர் அஞ்சலி ஜெயின் உருவாக்கிய ஸ்வர்ண பிரசாதம், புதிய கோல்ட் சீரிஸின் ஒரு பகுதியாகும்.
இந்த பிரபலமான இனிப்பு, இன்ஸ்டாகிராம் உணவு பிரியர்கள் மற்றும் பண்டிகை ஆர்வலர்களின் பேச்சாக மாறியுள்ளது.
இந்நிலையில் அவனவன் சாப்பாட்டிற்கே கஸ்ரப்படும் நிலையில் இது வேறயா என சமூகவலைத்தளவாசிகள் திட்டித்தீர்த்து வருகின்றனர்.