தங்கத்தால் பானிபூரி ; வைரலாகும் காணொளி!
பாஸ்ட்புட் பானிபூரி தங்கத் தட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப்படலத்துடன் பரிமாறப்படும் இணையத்தில் வைரலாகியுள்ளது. பாஸ்புட் உணவு இன்றைய காலத்தில் மக்களிடம் வெகு பிரபலம் என்பதுடன், பலரும் அதனையே விரும்பி உண்கின்றனர்.
இந்தியாவில் தெருவோர உணவுகளில் அதிகமாக விற்பனையாகும் பாஸ்புட் உணவுகளில் ஒன்றான பானிபூரி மக்களுக்கு பிடித்தமான உணவுகளில் ஒன்றாகும். உணவும் பிரியர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு வகைகளில் பானிபூரி தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத் தட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப்படலத்துடன் பானிபூரி
இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த ஒரு தெரு உணவக விற்பனையாளர் ஒருவர், பானிபூரியின் புதிய வகை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில்,
தங்கத் தட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப்படலத்துடன் பரிமாறப்படும் பானிபூரியுடன் துருவிய பாதாம் மற்றும் தண்டாய் ஆகிய கலவை சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 பானிபூரிகள் தட்டில் உள்ளது.
ஒவ்வொரு பானிபூரியிலும் துண்டாக்கப்பட்ட பாதாம் மற்றும் சில முழு முந்திரி மற்றும் பிஸ்தாவை சேர்க்கும் விற்பனையாளர் தாராளமாக தேனை சேர்த்து அவற்றை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவது போல காட்சிகள் உள்ளன.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது.