எனது தோல்விக்கு இதுவே காரணம்... ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட பதிவு!
இலங்கையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பிரச்சாரம் செய்வதற்கு தனக்கும் தனது கட்சியான ஐக்கிய ஜனநாயகக் குரலுக்கும் போதிய நேரம் கிடைக்கவில்லை என தேர்தலில் தோல்வியடைந்த ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இவர் கம்பஹா மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஒரு பயனுள்ள பிரசாரத்தை மேற்கொள்ள எங்களுக்கு அதிக நேரம் இல்லை என கட்சியின் தலைவரான ராமநாயக்க கூறினார்.
நாங்கள் ஒக்டோபர் 9, 2024 அன்று எங்கள் கட்சியை உருவாக்கினோம். 22 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்தோம், என்று அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி இம்ரான் கானின் மேற்கோளைக் குறிப்பிட்டு, “எனது குரலைக் கேட்க எனது மக்கள் கற்க வேண்டும்” என்றார்.