யாழ்ப்பாணத்தில் பழக் கடைகள் தொடர்பில் எடுக்கபடவுள்ள தீர்மானம் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை

Jaffna Sri Lanka Sri Lankan Peoples
By Vironika Oct 30, 2026 08:15 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் தரமான பழக் கடைகளை அடையாளம் காண வரைபடம் யாழ்ப்பாணத்தில், தரமான பழங்கள் கிடைக்கக்கூடிய விற்பனை நிலையங்களை அடையாளம் கண்டு, அவற்றின் விபரங்களை உள்ளடக்கிய வரைபடம் ஒன்றைத் தயாரிக்கவும், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் தரவுகளைச் சேகரித்து, முறையானதும் வினைத்திறனானதுமான வர்த்தகச் சேவையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர், நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை மற்றும் நிறை, அளவைகள் உத்தியோகத்தர்களுடன் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணத்தில் பழக் கடைகள் தொடர்பில் எடுக்கபடவுள்ள தீர்மானம் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை | Decision Planned On Fruit Shops In Jaffna

விசேட நடவடிக்கைகள் 

 அதன் போதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், தரமான பொருட்களின் விற்பனையை ஊக்குவிப்பதற்கும் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது

யாழ்ப்பாண மாவட்டத்தில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் செயற்பாடுகள், எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்வதே இக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும் குறிப்பாக, சந்தைகளில் இரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்பட்ட பழங்கள் விற்பனை செய்யப்படுவது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது

பழங்களை விரைவாகப் பழுக்க வைப்பதற்கும் நீண்டகாலம் பழுதடையாமல் பாதுகாப்பதற்கும் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் மக்களின் உடல்நலத்திற்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன

3 சடலங்கள்.. 3 கடிதங்கள் ; மகன், மகளுடன் தற்கொலை செய்துக்கொண்ட தாய் ; இந்தியாவை உலுக்கிய சம்பவம்

3 சடலங்கள்.. 3 கடிதங்கள் ; மகன், மகளுடன் தற்கொலை செய்துக்கொண்ட தாய் ; இந்தியாவை உலுக்கிய சம்பவம்

இவ்விடயம் தொடர்பில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது, எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்குள் இச்செயற்பாடுகளை முழுமையாக நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது

இதன் முதற்கட்டமாக, பழங்கள் மற்றும் மரக்கறிகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களைப் பதிவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் தரமான மற்றும் பாதுகாப்பான விற்பனை முறையை உறுதிப்படுத்த முடியும். ஏப்ரல் முதலாம் திகதி முதல் பதிவு செய்யப்பட்டு, உரிய தரநிலைகளைப் பின்பற்றும் வர்த்தகர்களுக்கு இரசாயனப் பாதிப்பற்ற இயற்கையான பழங்களை விற்பனை செய்வதற்கான சான்றிதழ் வழங்கப்படும்

தீடிர் சோதனையில் சிக்கிய நபர்; 25 வயதுடைய யுவதியுடன் கைதான 18 வயதுடைய இளைஞர்

தீடிர் சோதனையில் சிக்கிய நபர்; 25 வயதுடைய யுவதியுடன் கைதான 18 வயதுடைய இளைஞர்

அதனைத் தமது விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்தி, நுகர்வோரின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ள முடியும் அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் தரமான பழங்கள் கிடைக்கக்கூடிய விற்பனை நிலையங்களை அடையாளம் கண்டு, அவற்றின் விபரங்களை உள்ளடக்கிய வரைபடம்(Map) ஒன்றைத் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் நுகர்வோர் இரசாயனக் கலப்பற்ற பாதுகாப்பான பழங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் மேலும், குடிநீர்ப் போத்தல்களைப் பரிசோதித்தல், வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், நுகர்வோர் முறைப்பாடுகளை விசாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் சிறிய அளவிலான மோசடிகள் கூட பொதுமக்களுக்கு பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் 

நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US