வைரலாகும் ஜெனிலியாவின் 5 பைசா தோடு ; அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகை ஜெனிலியா அணிந்திருந்த பழைய 5 பைசா நாணய வடிவிலான வித்தியாசமான தோடு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தியாவில் நீண்ட காலத்திற்கு முன்பே புழக்கத்திலிருந்து நீக்கப்பட்ட பழைய ஐந்து பைசா நாணயத்தின் வடிவத்தை ஒத்த தோடு ஒன்றையே ஜெனிலியா அணிந்துள்ளார்.
பார்ப்பதற்கு சாதாரணமான பழைய நாணயம் போன்று காட்சியளிக்கும் இந்தத் தோட்டின் தோராயமான மதிப்பு இரண்டு இலட்சம் இந்திய ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், ஜெனிலியாவின் இந்த வித்தியாசமான அணிகலன் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா.
தொடர்ந்து 'சச்சின்', 'சந்தோஷ் சுப்ரமணியம்', 'வேலாயுதம்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார்.
நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்ட ஜெனிலியாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது பொலிவுட் மற்றும் மராட்டிய மொழித் திரைப்படங்களில் நடித்து வருவதுடன், திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், பழைய நாணயத்தின் வடிவிலான விலையுயர்ந்த தோட்டுடன் அவர் தோன்றியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அவரது வித்தியாசமான ஃபேஷன் தேர்வு குறித்த விவாதங்களும் சமூக வலைதளங்களில் அதிகரித்துள்ளன.